tamilnadu

ரஞ்சன் கோகோயிடம் நேர்மையான விசாரணை வேண்டும்: பெண் வழக்கறிஞர்கள்

புதுதில்லி, ஏப். 21- பாலியல் புகாரில் சிக்கியுள்ள உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயிடம் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது உச்சநீதிமன்றத்தில் பணி யாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துஏப்ரல் 19ஆம் தேதி 22 நீதிபதிகளுக்குக் கடிதம்அனுப்பியிருந்தார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி மீது வைக்கப் பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டை ஓய்வு பெற்ற மூத்த நீதிபதிகள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என மற்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும்நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் சஞ்சீவ் கானா ஆகியோரை உள்ளடக்கிய சிறப்பு அமர்வு சனிக்கிழமை (ஏப்ரல் 20) இதை விசாரிக்க அமைக்கப்பட்டது.இந்தப் பாலியல் புகாரையடுத்து உச்சநீதி மன்றத்தின் நடவடிக்கைகள் மீது அதிருப்தி தெரிவித்து பெண் வழக்கறிஞர்கள் சங்கமான குற்றவியல் சட்ட பெண் வழக்குரைஞர்கள் சங்கம் (கூhந றுடிஅநn ஐn ஊசiஅiயேட டுயற ஹளளடிஉயைவiடிn (றுஊடுஹ) பல்வேறு கேள்விகளை எழுப்பி யுள்ளது. உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்கள், தவறான குற்றச்சாட்டுகளை உள்நீதிமன்ற நடைமுறை (1999) விதியின் கீழ் விசாரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் கீழும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மீதான இந்தப் புகார்களை விசாரிக்க 2013ஆம் ஆண்டில் இந்திய உச்சநீதிமன்றத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்ட விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால், இப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது அளிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக மேற்கண்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல், முன்னெப்போதும் அறியப் படாத வகையில், உச்சநீதிமன்றத்தின் சிறப்புஅமர்வு இந்தப் புகாரை விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றத்தின் வலைப்ப க்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (ஏப்ரல் 17) முதல்உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் திங்கட்கிழமை தான் (ஏப்ரல் 22) உச்சநீதிமன்றம் இயங்கும். இந்நிலையில் இதுதொடர்பாக பெண் வழக்கறிஞர் சங்கம் எழுப்பியுள்ள முக்கியக் கேள்விகள்:


1. குற்றம்சாட்டப்பட்டவரே ஏன் தனது சொந்த வழக்கில் தீர்ப்பு சொல்ல அமர்த்தப்பட்டார்?தன்னுடைய சொந்த வழக்கில் எந்தவொரு நீதிபதியும் இயற்கை நியதியின் புனிதமான கோட்பாடுகளை மதித்துத் தீர்ப்பு சொல்ல இயலாது. விசாரணை அமர்வில் தனி அதிகாரம் கொண்ட நபராகத் தலைமை நீதிபதி இருப்பார். இந்த அமர்விலிருந்து ஏன் அவர் தன்னை விடுவித்துக்கொள்ள எண்ணவில்லை?


2. சிறப்பு அமர்வில் ஏன் பெண் நீதிபதிகள் இல்லை?உச்சநீதிமன்றத்தின் உட்புகார்கள் குழுவின் தலைவராக இருப்பவர் நீதிபதி இந்து மல்ஹோத்ரா. ஆனால், அவர் இந்தச் சிறப்பு விசாரணை அமர்வில் இணைக்கப்பட வில்லை. உச்சநீதிமன்றத்தின் மற்ற பெண்நீதிபதிகளிலும் ஒருவர்கூட இணைக்கப்பட வில்லை. பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்களைப் பெண்கள் தலைமை யிலான விசாரணை ஆணையம் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று விதிகள் தெள்ளத்தெளிவாகக் கூறுகிறது. மேலும் விசாரணைக் குழுவில் பெரும்பான்மையாகப் பெண்கள் இடம்பெற வேண்டும் என்றும் விதிகள் கூறுகிறது. ஆனால், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணை அமர்வில் ஏன் இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை?


3. குற்றம்சாட்டப்பட்டுள்ள தலைமை நீதிபதி சனிக்கிழமை விசாரணையில் பேசும்போது அவருடைய தனிப்பட்ட வங்கி இருப்பு விவரங்கள், அவருடைய புகழ் குறித்துக் கூறுகிறார். இவற்றுக்கும் இவர் மீதான புகாருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?தனிப்பட்ட ஒரு நீதிபதியின் மீதான தவறான நடத்தைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எது வும் இல்லாமல் இருப்பதுதான் நீதித்துறை சுதந்திரம் என்று கொள்ள இயலாது. உச்ச நீதிமன்றத்தின் கடந்த கால அனுபவங்களிலும் பதவியிலிருந்த நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் புகார்கள் நீதித்துறை சுதந்திரம் மீதான தாக்குதலாக அப்போதுமுத்திரை குத்தப்படவில்லை. குறிப்பாக ஓய்வு பெற்ற நீதிபதியின் மீது இத்தகைய புகார் எழுந்தபோது உச்சநீதிமன்றத்தின் சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு, அவர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்கப்பட்டது.தவறான நடத்தைகளால் எழும் புகார் குறித்து குறிப்பிட்ட நீதித்துறை அதிகாரியை விசாரிப்பதன் மூலமாக, அதை நீதித்துறையின் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தலாக எடுத்துக் கொள்ள இயலாது. ஆனால் ஏன் தலைமை நீதிபதி அப்படி முன்வைக்க முயல்கிறார்? எனவே தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.