tamilnadu

img

தனிமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

சேலம், ஜூலை 6- சேலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்ப டுத்தப்பட்ட பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே ஒன்பதாம்பாலி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நி லையில் அதே பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பரிசோதனை செய்தததில், 10 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், முகாமில் இருந்த பெண் ஒருவர் திங்க ளன்று அதிகாலை குளியலறையில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் கல்லூரி வளாகம் முன்பு சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனால் சேலம் - ஏற்காடு பிரதான சாலை யில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் காவல்துறை யினர் மற்றும் சுகாதாரத்துறையினர் சாலை மறியலில் ஈடு பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அனை வரும் கலைந்து சென்றனர்.  சேலம் மாவட்டத்தில், ஏற்கனவே கொரோனால் பாதிக் கப்பட்ட 5 பேர் உயிரிழந்த நிலையில் நோய் தொற்று அறி யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம் மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.