tamilnadu

img

தில்லி வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

புதுதில்லி, பிப்.29- தில்லியில் மதவெறி வன்முறை வெறியாட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறு வாழ்வு அளித்திட, நிதி வசூலித்திட வேண்டுமாய் மக்களுக்கும், கட்சியின் அனைத்து மாநிலக் குழுக்களுக்கும், கட்சி அனுதாபிகளுக்கும், ஆதரவாளர்க ளுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு, ஒரு மைப்பாடு நிவாரணக் குழு (Solidarity Relief Committee) அமைத்திட இருக்கிறது.

தில்லி மதவெறி வன்முறை வெறி யாட்டங்கள் துயரார்ந்த முறையில் உயி ரிழப்புகள்; மிகவும் விரிவான அளவில் வாழ்வாதாரங்கள், வீடுகள் மற்றும் சொத்துகள் சூறையாடல்களை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவங்கள் நடந்த தில்லி யின் வட கிழக்குப் பகுதியானது இரு மதத்திலும் இருக்கின்ற முறைசாராத் தொழிலாளர்கள், தொழிலாளர் வர்க்கத்தி னர் மற்றும் கீழ்மட்ட மத்தியதர குடும்பத்தினர் ஏராளமாக வசித்திடும் பகுதியாகும்.  வன்முறை வெறியாட்டங்களால் பல வழிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் துன்பங்களும், துயரங்களும் மிகவும் அதிகமாகும்.   இத்தகைய சூழ்நிலையில், நிவாரணப் பணிகளில் எவ்விதமான மதச்சாயமும் பூசாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதை உத்தரவாதப் படுத்திட வேண்டும். அது மதச்சார் பற்றதாக அமைந்திட வேண்டும். பாதிக்கப் பட்டவர்கள், அவர்கள் எந்தவிதமான கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் அனைத்துத் தரப்பின ருக்கும் அளிக்கக்கூடிய விதத்தில் நிவாரண உதவிகள் அமைந்திட வேண்டும்.  

இந்த வேண்டுகோளை அவசரமான தாகக் கருதி அனைத்துத்தரப்பினரும் தாராளமாக நிதிஉதவி அளித்திட வேண்டும் என்று அரசியல் தலைமைக் குழு வேண்டுகோள் விடுக்கிறது.  காசோலைகளில் “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)” என்று எழுதப்பட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.             (ந.நி.)