நீதித்துறை- கூட்டு நாடாளுமன்றக்குழு விசாரணை நடத்துக!
மக்களவையில் சிபிஎம் எம்.பி., ஆரிப் வலியுறுத்தல்
புதுதில்லி, மார்ச் 12- தில்லி வன்முறை வெறியாட்டங்கள் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். எனவே, இது தொடர்பாக நீதித்துறை மற்றும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை. இந்த விசாரணைமுடியும் வரை யிலும், உள்துறை அமைச்சர் தனது பதவி லிருந்து விலக வேண்டும். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.எம்.ஆரிப் வலியுறுத்தினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் புத னன்று தில்லி வன்முறைகள் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று ஏ.எம். ஆரிப் பேசியதாவது:
1984 சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக் கலவரங்களை அடுத்து, அதேபோன்றதொரு நிலைமையை இப்போது தில்லி பார்த்திருக்கிறது. குறைந்தபட்சம் 53 பேர் கொல்லப்பட்டிருக் கிறார்கள், 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கிறார்கள். நம் நாட்டில் ஜனநாயகம் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. அரசாங்கம், நம் ஜன நாயகத்தின் நான்கு தூண்களான - நாடாளுமன்றம், சட்டமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை மற்றும் நான்காவது தூண் என அழைக்கப்படும் ஊடகங்கள் - என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. இவை அனைத்தையும் சமீபத்தில் நடைபெற்ற தில்லி வன்முறை களில் பார்க்க முடிந்தது.
அமைதியாகத்தான் வாழ்ந்து வந்தோம்
வன்முறைகள் தொடங்குவதற்கு முன்னர் ஷாஹீன்பாக் சென்றிருந்தேன். அங்கே மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடை பெற்றிருந்த போதிலும், அது அமைதியான கிளர்ச்சிப் போராட்டமாகவே இருந்தது. கிளர்ச்சியாளர்கள் எவ்விதமான வன்முறை நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. பின்னர் வன்முறை நடைபெற்ற இடங்களுக்கும் சென்றேன். அங்கே வாழ்ந்துவந்த இந்து மக்களிடமும், முஸ்லீம் மக்களிடமும் பேசி னேன். இதுநாள்வரையிலும் நாங்கள் அமைதியாகத்தான் வாழ்ந்து வந்திருக் கிறோம் என்று அவர்கள் என்னிடம் கூறி னார்கள்.
கொலைக்களமாக மாறிய தில்லி
உத்தரப்பிரதேசத்திலிருந்து வர வழைக்கப்பட்டவர்கள், வன்முறை வெறி யாட்டங்களில் ஈடுபட்டார்கள். தில்லி ஒரு கொலைக்களமாக மாறியது. இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஒரு சமூகத்தினருக்கு எதிராகத் தாக்குதலை நடத்தினார்கள். ஒரு சமூகத்தினருக்கு எதிரான வழிபாட்டுத் தலம் மட்டும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. எனவே இது 1969 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் குஜராத்தில் நடைபெற்றதைப்போல, முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளப் பட்ட ஒன்றாகும்.
மதச்சார்பின்மை- நீதித்துறையை கொன்றுள்ளீர்கள்
நீங்கள், இங்கே தேவையற்ற முறை யில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் பல சட்டங்களை நாடாளுமன்றக் குழுக்களில் விவாதம் எதுவும் நடத்தா மலேயே நிறைவேற்றி இருக்கிறீர்கள். இக்கூட்டத்தொடரின் முதல் அமர்வில் உங்களிடம் உள்ள பெரும்பான்மையை வைத்துக்கொண்டு 37 சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றி இருக்கிறீர்கள். இவற்றை நிறைவேற்றியிருப்பதன் மூலம், ஒரு குறிப் பிட்ட சமூகத்தினரை நீங்கள் குறி வைத் திருக்கிறீர்கள். மதவெறித் தீயை விசிறிவிடுவதன் மூலமாக மக்கள் இடையே பகைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இது, ஜனநாய கத்தின் அடிப்படைத் தூணாக விளங்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்பைச் சீர்குலைப்பதையே காட்டுகிறது. நீங்கள் அரசமைப்புச்சட்டத்தின் மதச்சார்பின்மை யையே கொன்று கொண்டிருக்கிறீர்கள்.
இப்போது, ஜனநாயகத்தின் அடுத்த தூணாக விளங்கும் நீதித்துறைக்கு வரு கிறேன். தில்லி வன்முறைகளின்போது, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், வெறுப்பை உமிழ்ந்த பாஜக தலைவர் களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட போது, இந்த அரசாங்கம் அவரை அன்றைய தினம் நள்ளிரவிலேயே இடமாற்றம் செய்தது. அவரது இடமாற்றம் தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவைத்தான் அன்றையதினம் நடைமுறைப்படுத்தியதாக நியாயம் கற்பிக்கப்படுகிறது. வழக்கு மற்றொரு நீதிபதியின் அமர்வுக்குப் போகிறது. அவர், இந்த வன்முறைகள் தொடர்பாக உடனடியாக எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம் என்று உத்தர விடுகிறார். இந்த நடவடிக்கையின் மூலம் இந்த அரசாங்கம் நீதித்துறையையும் கொன்றிருக்கிறது. மக்கள், நீதித்துறை யின்மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இது, ஜனநாயகத்தின் மற்றொரு தூண் சீர்குலைந்திருப்பதைக் காட்டுகிறது.
வன்முறையாளர்களுக்கு ஆதரவாக தில்லி காவல்துறை
இப்போது, ஜனநாயகத்தின் மூன்றா வது தூணாக விளங்கும் அரசு நிர்வாகத்திற்கு வருகிறேன். நாட்டின் தலைநகரில் நடை பெற்றுவரும் தொடர் வன்முறை நிகழ்வு கள் அனுராக் தாகூர் போன்ற மத்திய அமைச்சர்கள் மற்றும் (பதிவு செய்யப்பட வில்லை) பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சுக்களின் விளைவாகும். தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள், தில்லிக் காவல்துறையினரின் மிகப்பெரிய தோல்வியாகும். இரண்டு நாட்கள், தில்லிக் காவல்துறை முறையாகத் தலை யிடாதது மட்டுமல்ல, அவர்கள் வன்முறையாளர் களுக்கு ஆதரவாக நின்றனர். இதே போன்ற காவல்துறையினரின் செய லின்மையை நாங்கள் இதற்கு முன் ஜேஎன்யு விடுதி முகமூடி அணிந்த ரவுடிகளால் தாக்கப்பட்ட சமயத்திலும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திலும் மற்றும் பல இடங்களில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களின்போதும் பார்க்க முடிந்தது. இது, இவ்வாறு அரசு நிர்வாகமும் சீர்குலைந்திருப்பதைக் காட்டுகிறது.
நிறைவாக ஊடகங்கள் எனப்படும் நான்காவது தூணுக்கு வருகிறேன். அவை, வழிபடும் இடங்களில் தாக்குதல்கள் நடத்தப் பட்டதை அதிகப்படுத்தி காண்பித்ததாகவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சார்பாக இருப்பதாகவும் கூறி, இரு கேரள தொலைக்காட்சி சானல்கள், ஆசியா நெட் மற்றும் மீடியா ஒன் ஆகியவை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டன. இது, ஜனநாய கத்தின் நான்காவது தூணும் சீர்குலைக்கப் பட்டதைக் காட்டுகிறது.
பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி செய்க!
தில்லி வன்முறை வெறியாட்டங்கள் அர சால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். எனவே, இது தொடர்பாக ஒரு நீதித்துறை மற்றும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை. இந்த விசாரணைமுடியும் வரை யிலும் உள்துறை அமைச்சர் தனது பதவி யிலிருந்து விலக வேண்டும். அவர் ராஜி னாமா செய்ய வேண்டும். மத்திய அரசாங்கம் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு புனர்வாழ்வுக்காக தேவையான நிதி உதவி செய்திட வேண்டும். வன்முறை வெறியாட்டங்களுக்கு வழிவகுத்த தலை வர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு ஆரிப் பேசினார். (ந.நி)