புதுதில்லி, ஏப். 20 - ஏழைக் குடும்பங்க ளுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் விகிதம், ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் வழங்கும் நிதித் திட்டம் குறித்தும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால்அத்திட்டத்தைக் கட்டாயம் நிறைவேற்றுவோம் என்று உறுதியளிக்கும் விதமாகவும் 1 கோடியே 20 லட்சம் ஏழைக் குடும்ப ங்களுக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனித்தனியாக கடிதங்களை அனுப்பி யுள்ளார். இந்தி மொழி யிலும், அந்தந்த பகுதி பிராந்திய மொழிகளிலும் இக்கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.