புதுதில்லி:
தில்லியில் 4வது மாடிக்கு மேல் இயங்கும் தேர்வுப் பயிற்சி மையங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறும் போது, தீ விபத்து ஏற்படும் போது தடுப்ப தற்கு ஏதுவாக 4 வது மாடிக்கு மேல் இயங் கும் தேர்வுப் பயிற்சி மையங்களுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். தில்லி தீயணைப்புத்துறை யின் பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உள்துறை அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து தில்லியின் பல்வேறு பகுதியில் தீயணைப்புத்துறையினர் ஆய்வு நடத்தினர். சமீபத்தில் குஜராத்தின் சூரத் நகரில் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 மாணவர்கள் உயிரிழந்தது குறிப் பிடத்தக்கது.