புதுதில்லி:
கொரோனா வைரஸ் நோய்பரவி வருவதால் நாளை நடைபெறவிருந்த மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது.நாடு முழுவதும் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு மார்ச்26 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனுக்கள்பெறப்பட்டு, இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், 37 வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுஎம்.பி.யாக தேர்வு செய்யப்பட் டுள்ளனர். மீதமுள்ள உறுப்பினர் பதவிகளுக்கு, தேர்தல் நடத்தமுடிவு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. இதனால் மாநிலங்களவைத் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.