“குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறாமல் குடியரசுத் தலைவரின் கரங்களால் பதக்கங்களை பெறமாட்டோம்’’
புதுச்சேரி, டிச.22 - குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஜாமியா மிலியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகங்கள் உள்பட நாடு முழுவதும் போராடும் மாணவர்கள் மீது மோடி அரசும் அதன் ஆதரவு மாநில அரசுகளும் ஏவியுள்ள அடக்குமுறையைக் கண்டித்தும், பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக மாண வர்கள், டிசம்பர் 23 (இன்று) குடி யரசுத் தலைவர் பங்கேற்க உள்ள பட்டமளிப்பு விழாவை புறக் கணிப்பது என முடிவு செய்துள்ள னர். இது மத்திய அரசு வட்டா ரத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாண்டிச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா திங்களன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மாணவர் களுக்கு பட்டங்களை வழங்கி பேரு ரையாற்ற இருக்கிறார். இந்நிலை யில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், நாடு முழுவதும் நடைபெற்று வருகிற மாணவர்கள் எழுச்சியின் ஒரு பகுதி யாகவும், மோடி அரசின் அடக்கு முறைக்கு கண்டனம் தெரிவித்தும் பட்டமளிப்பு விழாவை புறக் கணிப்பது என்று பாண்டிச்சேரி பல் கலைக்கழக மாணவர் பேரவை முடிவு செய்து அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாணவர் பேரவையின் தலைவர் பரிச்சை யாதவ், செயலாளர் குறளன்பன் ஆகியோர் வெளியிட்ட அறி விப்பில், பல்கலைக்கழக பட்ட மளிப்பு விழாவை சிறப்பான முறை யில் நடத்திட மாணவர் பேரவை உதவிட வேண்டுமென்றும், இவ்விழாவில் தொண்டர்களாக பணியாற்றும் மாணவர்களது பெயர்களை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அளிக்குமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது; எனினும் நாடு முழுவதும் குடி யுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய கொடிய சட்டங்களுக்கு எதி ராக நடைபெற்று வருகிற மாபெரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பது என்றும் அதில் தொண்டர்களாக எந்த மாணவரும் பங்கேற்பதில்லை என்றும் விழாவிற்கு செல்வதில்லை என்றும் மாணவர் பேரவை முடி வெடுத்துள்ளது என குறிப்பிட்டுள் ளனர். பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவையின் இந்த முடிவை ஏற்று கார்த்திகா, ஏ.எஸ்.அருண்குமார் ஆகிய மாணவர்கள் பட்டங்களைப் பெறாமல் புறக்கணிக்கப்போவதாக சமூக ஊடகங்களில் அறிவிப்பு செய்துள்ளனர். கார்த்திகா, மின்னணு ஊடகவியலில் முதலாம் இடம் பெற்று தங்கப்பதக்கம் பெற உள்ள மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. அருண்குமார் தனது ஆராய்ச்சிப்படிப்பை முடித்து அதற்கான பட்டத்தை பெற உள்ள மாணவர் ஆவார். இரு வரும், விழாவை புறக்கணிப்ப தாகவும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப்பெறப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி சமூக ஊடக பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்து, மாணவர் பேரவையின் தலைவர்கள் வெளியிட்ட வேண்டுகோள் அறிவிப்பில், “பட்டமளிப்பு விழா என்பது நம் அனைவருக்குமே முக்கியத்துவம் வாய்ந்த நாள் கும். நாம் ஒன்றுகூடி கொண்டாட வேண்டிய ஒரு நாள் அது. பல்கலைக்கழக படிப்பை முடித்து நமது வாழ்க்கையை தேர்வு செய்வதற்கான புதிய உல கத்திற்குள் நுழைவதற்காக நம்மை தயார்ப்படுத்திக் கொள்கிற நாள் அது. நாம் பெறப்போகிற பட்டங் கள் மிகவும் முக்கியமானவை. ஆனால் இவை அனைத்தை யும்விட, நாம் எதற்காக இந்தப் பட்டங்களை பெறுகிறோம் என்பது மிக மிக முக்கியமானது. முதல்முறையாக வாழப்போகிற நமது வாழ்க்கையையே விலையாகக் கேட்கிறது அரசு. நமது வாழ்க்கை ஈவிரக்க மில்லாமல் முடிவுக்கு கொண்டு வரப்படுகிற சூழலை உருவாக்கி யிருக்கிறது அரசு. ஜாமியா, அலி கார் முஸ்லிம் பல்கலைக்கழகம், மங்களூர் என ஒவ்வொரு இடத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் வன்முறையை கட்ட விழ்த்துவிட்டிருக்கிறது அரசு. நம் கண் முன்பே நமது சகோதரத்துவம் அழிக்கப்படுகிறது. நமது ஒருமைப்பாடு தகர்க்கப்படுகிறது. பட்டமளிப்பு விழாவில் குடி யரசுத் தலைவர் பங்கேற்க இருக் கிறார். அமைதியான முறையிலும் அரசியல் சாசனப்பூர்வமான முறையிலும் நமது எதிர்ப்பையும் அரசின் மீதான ஏமாற்றத்தையும் பதிவு செய்வோம். விழாவை புறக்கணிப்போம். குடியரசுத் தலைவரின் கரங்களால் வழங்கப் படுகிறப் பட்டங்களைப் புறக்கணிப் போம். இது உண்மையில் ஒரு மாபெரும் போராட்டம். இதில் பங்கேற்பதற்கே மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் நமக்கிருக்கிறது” என்று கூறியுள்ளனர்.