புதுதில்லி, ஏப்.19 மத்திய அரசு ஊழியர்களில் ஓய்வூதிய தாரர்களின் ஓய்வூதியம் கொரோனா வைரஸ் காரணமாக 20 சதவீதம் குறைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சில முக்கியநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் குறைக்கப்பட்டது, தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்து, இந்த மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றோரின் ஓய்வூதியமும் 20 சதவீதம் குறைக்கப்படும். சிறிது காலத்துக்கு நிறுத்திவைக்கப்படும் என்றும் தகவல் வெளியானது.
இதையடுத்து, மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் துறை மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், " மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் திட்டம் இல்லை. சம்பளங்கள், ஓய்வூதியங்கள் பாதிக்கப்படாது. எனத் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசின் விளக்கத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பதிவிட்ட கருத்தில் " ஓய்வூதியதாரர்களின் குழப்பத்துக்கு விளக்கமளித்தமைக்கு நன்றி, ஓய்வூதியம் குறைப்பு இல்லை" எனத் தெரிவித்துள்ளார்