tamilnadu

img

ஜம்மு காஷ்மீர் இடம்பெற்றுள்ள புதிய வரைபடத்தை வெளியிட்டார் பாக்கித்தானின் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டார்.மொத்த ஜம்மு காஷ்மீரும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அந்த பாகிஸ்தான் வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது.

பாகிஸ்தானின் அரசு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அந்த வரைபடத்தில், ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியின் மேலே, "இந்தியா சட்டத்திற்குப் புறம்பாக ஜம்மு காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது," என குறிக்கப்பட்டுள்ளது.  இந்த வரைபடம் பாகிஸ்தான் மக்களின் அபிலாஷைகளைக் குறிப்பதாக, காணொளி காட்சியில் தோன்றிய இம்ரான் கான் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மக்களின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை ஆதரிப்பதாகவும், இந்திய மேலாதிக்கத்தை மறுப்பதாகவும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சர்ச்சைக்குரிய பகுதியின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சட்ட விரோதமானது என்றும் தெரிவித்தார்.  அமைச்சரவையால், எதிர்க்கட்சிகளால், காஷ்மீர் தலைவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த புதிய வரைபடம் இனி மேல் பாகிஸ்தானில் பயன்படுத்தப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார்.