பனாஜி:
பாஜகவுக்கான எதிர்ப்பு நாடு முழுவதும் வலுவடைந்து வரும் நிலையில், “பாஜகவை எதிர்ப்பவர்களை, இந்துக்களை எதிர்ப்பவர்கள் என்று அர்த்தம்கொள்ளக் கூடாது” என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜிஜோஷி திடீர் விளக்கம் அளித்துள்ளார்.பாஜகவுக்கான எதிர்ப்பு என்பது,ஒரு அரசியல் போராட்டம்; அதனைஇந்து எதிர்ப்போடு முடிச்சு போடக் கூடாது; ஏனென்றால் பாஜக என்ற கட்சியே, இந்து மதமல்ல என்றும் பையாஜி ஜோஷி பின்வாங்கியுள்ளார்.
கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் மாநாட்டில் உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து, பையாஜிஜோஷி பேசியுள்ளார். அப்போது இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.“ஆர்எஸ்எஸ் அனைவரையும் வரவேற்கிறது. இந்து அல்லாதவர்கள் கூடஆர்எஸ்எஸ்-ஸில் இணையலாம். ஆர்எஸ்எஸ் இந்துக்களை மையமாக வைத்து இயங்குவது உண்மைதான். ஆனால், கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ ‘சங்’ சிந்தாந்தத்துடன் இருந்தால்,அவர்களும் ஆர்எஸ்எஸ்-ஸில் இணையத் தடையில்லை; இந்துக்களுக்கு என் னென்ன பதவிகள் வழங்கப்படுமோ, அவை அவர்களுக்கும் வழங்கப்படும்” என்றும் நாடகம் ஒன்றை ஜோஷி அரங்கேற்றியுள்ளார்.