ஜாலியன் வாலாபாக் போல மாற்றப்படலாம்..!
அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை
புதுதில்லி, பிப்.6- குடியுரிமைத் திருத்தச் சட் டத்தை எதிர்த்து பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடந்த 52 நாட்களாக தில்லியின் ‘ஷாகீன் பாக்’ பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனைக் கண்டு கடும் ஆத்தி ரமடைந்துள்ள பாஜக தலை வர்கள், ஷாகீன்பாக் போராட்டக் காரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று தொட ர்ந்து கொலைவெறிப் பிரச்சா ரத்தை மேற்கொண்டு வருகின்ற னர். அதற்கேற்பவே, இந்துத்துவா கும்பலைச் சேர்ந்த 3 பேர், ஜாமியா மிலியா மற்றும் ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார். இந்தப் பின்னணியிலேயே, “பிப்ரவரி 8-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு ‘ஷாகீன் பாக்’ காலி செய்யப் படுவதற்கான அறிகுறிகள் தெரி கின்றன; அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்படலாம்; ஷாகீன் பார்க் போராட்டம் ஜாலியன்வாலா பாக் சம்பவம்போல மாற்றப்பட லாம்; அதற்கான வாய்ப்புகள் அதி கமாக உள்ளது” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை விடுத்துள் ளார். “மக்களைச் சுட்டுத்தள்ளு மாறு வெளிப்படையாகச் சொல் லும் பாஜக அமைச்சர்கள் சுதந்தி ரமாக உலவும் இந்தக் காலகட்டத் தில், எதுவும் நடக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “இரண்டு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி யூதர்களை ஹிட்லர் கொன்றொழித்தார். ஆனால், அது என்னுடைய நாட்டிலும் நடப் பதை நான் விரும்பவில்லை” என வும் ஓவைசி குறிப்பிட்டுள்ளார்.