சென்னை:
வங்கிக்கடன் தவணை தொகையை திருப்பி செலுத்தும் அவகாசத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
ஊரடங்கால் பாதிக் கப்பட்ட நிலையில், வங்கிக்கடன் தவணை தொகையை திருப்பி செலுத்தும் அவகாசத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண் டும். ரூ.57,128 கோடி உபரித் தொகையை மத்திய அரசுக்கு கொடுக்கும் ரிசர்வ் வங்கியால் எளிய மக்களுக்கு உதவுவது கடினமல்ல. பேரிடர் காலத்தில் வாடிக்கையாளர்களை வங்கிகள் வாட்டி வதைக்க நினைப்பது மனிதாபிமானம் அல்ல.நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நிற்பதை உணர்ந்து அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். இதுவரை நேர்மையாக பணம் செலுத்திய வாடிக்கையாளரின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.கொரோனா கால ஊரடங்கு என்ற ஒரு கண்ணோட்டத்துடன் மட்டும் இதைப் பார்க்காமல்; ஊரடங்கையும் தாண்டி ஒவ்வொருவரின் கைகளில் இருக்க வேண்டிய ‘ரொக்கப் பணம்’ அல்லது ‘வருமானம்’ என்ற நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நிற்கிறது என்பதை உள்மனதில் வாங்கிக் கொண்டு, கடன் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த ஏற்கனவே ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திட வேண்டும்.
அப்படி நீட்டிக்கப்பட்ட காலங்களுக்கு உரிய வட்டித் தொகை - அபராத வட்டி போன்றவற்றை வசூலிக்காமல், ஏழை - எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டிட முன்வர வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தசையும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.