tamilnadu

img

வேத’ கால போர் முறைகளை ராணுவத்தில் புகுத்த வேண்டுமாம்.... நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் கோரிக்கை...

புதுதில்லி:
இந்திய ராணுவத்தில் வேதகால போர் முறைகளைப் புகுத்த வேண்டும் என்ற ஆவலை பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பாஜக-வைச் சேர்ந்த எம்.பி.க்கள் குன் பர் புஷ்பேந்திர சிங் சந்தல் மற் றும் மாலா ராஜ்யலட்சுமி ஷா ஆகியோர், மத்திய அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.அதில், “இந்திய பாதுகாப்புத் துறையை பலப்படுத்த வேத காலத்தில் சொல்லப்பட்ட போர்முறைகளை கொண்டுவர திட்டங்கள் ஏதும் உள்ளதா?” என்று கேட்டுஅதிர்ச்சி அளித்துள்ளனர்.நாட்டின் பாதுகாப்பிற்காக, ரபேல் போர் விமானங்கள், எஸ்-400 வான் பாதுகாப்பு ஆயுதஅமைப்பு, நவீன ரக டாங்கிகள், பீரங்கிகள், துப்பாக்கிகளை இந்திய ராணுவம் வாங்கிக் குவித்து வருகிறது. இந்நிலையில், வேதகால போர்முறைகள் என்று பாஜகவினர் பேசியிருப்பது, சிரிப்பை வரவழைத்துள்ளது. ஆனால், இந்த கேள்விக்கும் மத்திய பாஜக அரசு மிகுந்த பொறுப்பு உணர்வுடன், ‘அப்படியான தொடர்பான திட்டங்கள் எதுவும் இல்லை’ என்று பதிலளித் துள்ளது.

ஆனால், பாஜக எம்.பி.க் களின் கேள்விக்கு அரசியல் விமர்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.வேதகால போர்முறைகள் என்றால், குதிரைபூட்டிய தேரில் சென்று வில், வாள், கதாயுதம், வஜ்ராயுதம் மூலம் சண்டை போடச் சொல்கிறார்களா.. அப்போது இருந்ததாக கூறப்படும் வஜ்ராயுதம், பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம்போன்ற மந்திர ஆயுதங்களை பயன்படுத்தச் சொல்கிறார்களா... அபிமன்யு-வை சிக்க வைத்த மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்ட சக்கர வியூகத்தை பிரயோகித்து பார்க்க வேண்டும் என்கிறார்களா.. மந்திரங்கள் மூலமாக ஏவல் செய்து, எதிரியை சித்தபிரமை அடையச் செய்வதையோ அல்லது எதிரிகள் மீது முனிவர்கள்போல சாபம் விடுவதை சொல்கிறார்களா...? பாஜக எம்.பி.க்கள்எதைச் சொல்கிறார்கள் என்றுபலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். பாஜக-வினரின் இதுபோன்ற நேரத்தை வீணடிக்கும் கேள்விகளை நாடாளுமன்றம் எப்படி அனுமதிக்கிறது என்றும் கேட்டுள்ளனர்.