education

img

கோவையில் ராணுவத்திற்கு நேரடி ஆட்சேர்ப்பு

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு கோவையில் நடைபெறும் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் (Army Recruitment Rally) தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் கலந்து கொள்ள வேண்டும்.

ஆட்சேர்ப்பு நடைபெறும் தேதிகள்: மே மாதம் 5ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

ஆட்சேர்ப்பு நடைபெறும் இடம்: பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு மைதானம், கோவை.

கல்வித்தகுதி
1. Soldier (Technical): +2-வில் கணித பாடப்பிரிவில் குறைந்தது 50 சதவிகிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Soldier (Technical) (Ammunition/Aviation): +2 கணிதப் பாடப்பிரிவில் குறைந்தது 50 சதவிகிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. Soldier (Nursing Assistant): +2-வில் கணிதம் அல்லது அறிவியல் பாடப்பிரிவில் குறைந்தது 50 சதவிகிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. Soldier (General Duty): 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 225 (500க்கு) மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

5. Soldier (Tradesman): HouseKeeper/Mess Keeper Canteen பணிகளுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர பணிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. Soldier (Clerk/Store Keeper Technical): குறைந்தது 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +2-வில் கணிதம்/கணக்கியல்/புக் கீப்பிங் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 50 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு
1.10.2020 தேதியின் படி குறைந்தது 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 23 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். Soldier (General Duty) பணிக்கு மட்டும் 17 வயது முதல் 21 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும், சம்பளம் மற்றும் இதர சலுகைகள் ராணுவ விதிமுறைப்படி வழங்கப்படும்.

உடற்தகுதி
Soldier (Technical/Aviation/Ammunition/Nursing) பணிகளுக்கு குறைந்தபட்சம் 165 செ.மீ.49 கிலோ உடல் எடை இருக்க வேண்டும். மார்பளவு 77 செ.மீ இருக்க வேண்டும். 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

Tradesman பணிக்கு மார்பளவு 76 செ.மீ. மற்றும் 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். உடல் எடை 49.6 கிலோ இருக்க வேண்டும். உயரம் 166 செ.மீ. இருக்க வேண்டும். Soldier (Genral Duty) பணிக்கு குறைந்தபட்ச உயரம் 166 செ.மீ. இருக்க வேண்டும். மார்பளவு 77 செ.மீ.ருடன் 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். உடல் எடை 47.2 கிலோ இருக்க வேண்டும்.

Soldier (clerk/Store Keeper Technical) பணிக்கு குறைந்தபட்சம் 162 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 77 செ.மீ.ருடன் 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். உடல் எடை குறைந்தது 47.2 கிலோ இருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி
1) 1.6 கி.மீ. தூரத்தை 5 நிமிடம் 45 விநாடிக்குள் ஓடி கடக்க வேண்டும்.

2) 9 அடி நீளம் தாண்டுதல் மற்றும் Pullups எடுத்தல், Balancing Beam செய்தல் ஆகியவற்றில் வெற்றி பெற வேண்டும்.

உடற்தகுதி தேர்வின்போது நடத்தப்படும் போட்டிகள், திறமை அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண்கள் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ராணுவ மருத்துவர்களால் நடத்தப்படும் மருத்துவத் தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

மேற்கண்ட அனைத்து தேர்விலும் வெற்றிபெற்றவர்கள் மட்டும் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி, இடம், முகவரி போன்ற விபரங்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

நேரடி ஆட்சேர்ப்பின் போது கீழ்கண்ட சான்றுகளின் அசல் மற்றும் கெஜட் அதிகாரியிடம் கையெழுத்து மற்றும் முத்திரை பெற்ற ஒரு ஜோடி நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ்கள் அனைத்தும் லேமினேட் செய்திருக்க வேண்டும்.

சான்றிதழ் விபரம்
1) 10/+2/பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்

2) இருப்பிடச் சான்று, சாதி சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ்

3) சமீபத்தில் எடுக்கப்பட்ட கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 20. அளவு 34mm x 45mm/ White Colour பின்னணியில் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பிளைன் சர்ட் அணிந்திருக்க வேண்டும்.

அசலும், விண்ணப்பதாரரின் கூடுதல் கல்வித்தகுதி மற்றும் தொழிற்கல்வித்தகுதி சான்றுகள் இருப்பின் கொண்டு வர வேண்டும். சான்றிதழ்கள் விபரங்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். 18 வயதிக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் 19.4.2020 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேரடி ஆட்சேர்ப்பில் கலந்து கொள்வதற்கான நுழைவு சீட்டை 20.4.2020 தேதிக்கு பிறகு மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும், விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்க வேண்டும். 

===எம்.வெயில் முத்து===