tamilnadu

img

டோல்கேட் ஊழியர்கள் மீது பாஜக-வினர் தாக்குதல்!

புதுதில்லி:
ஆக்ரா மற்றும் நொய்டா ஆகிய இருபகுதிகளையும் இணைக்கும் முக்கிய சாலையான தில்லி - ஆக்ரா அதிவேக சாலையானது, ‘யமுனா எக்ஸ்பிரஸ்-வே’ என்று அழைக்கப்படுகிறது.இந்த சாலையில், உள்ளூர் பாஜக எம்.பி. ராம்சங்கர் கதேரியாவும், அவரது தொண்டர்களும் பயணித்துள்ளனர். டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஆகிய இரு கார்களில் வந்த அவர்கள், ஜேவார் டோல்பிளாசாவை இலவசமாக கடக்க முயன்றுள்ளனர்.ஆனால், டோல் பிளாசா ஊழியர்கள்அனுமதிக்கவில்லை. மேலும், டோல்கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதிக்க முடியும் என கூறியுள்ளனர். இதனால், ஆத்திமடைந்த பாஜக-வினர், ‘எங்களுக்கே சுங்கக் கட்டணமா?’ என்றுகேட்டு, டோல் பிளாசா ஊழியர்கள்மூவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

உள்ளூர் பாஜக பிரமுகரான சஞ்ஜீவ்சர்மாவும், அவரது ஆதரவாளர்களும் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் டோல் பிளாசா ஊழியர்கள் 3 பேர் பலத்த காயமடைந்து, தற்போதுஅவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.மத்திய அமைச்சர் நிதின் கட்காரி,அண்மையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், நல்ல சாலைகள் வேண்டுமானால் மக்கள் கட்டாயம், சுங்கக் கட்டணம் செலுத்தித்தான் ஆகவேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், அவரது பாஜக கட்சியைச் சேர்ந்தவர்களே சுங்கக் கட்டணம் செலுத்த மாட்டோம் என்று டோல்கேட் ஊழியர்களை கொடூரமாகத் தாக்கி, அராஜகம் செய்துள்ளனர்