tamilnadu

புதுவை முதல்வருக்கு தொற்று இல்லை

 புதுச்சேரி, ஜூன். 29- புதுச்சேரி முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை எனப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. புதுவையில் கொரோனா தொற்றால் திங்களன்று (ஜூன் 29) பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது. இதில் சிகிச்சை பெறுபவர்கள் 417 பேர். இதுவரை 262 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
பரிசோதனை முடிவு
மேலும் சட்டப்பேரவை வளாகத்தில்  முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்குத்  தொற்று உறுதியான நிலையில்  முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள், பாதுகாப்பு காவல் துறையினருக்கும் ஞாயிறன்று (ஜூன் 28) பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் முதல்வருக்குத் தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.