புதுச்சேரி, ஜூன் 1-பேரவைத் தலைவரை தேர்வு செய்வதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை திங்களன்று (ஜூன்3)17வது மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி பேரவைத் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் வெள்ளிக்கிழமை(மே31) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,“ புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 3 திங்களன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் பேரவைத் தலைவர் தேர்தலை நடத்த துணை நிலை ஆளுநர் நிர்ணயித்துள்ளார். நியமனச் சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பு ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மொத்தம் 30 உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப் பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 15 உறுப்பிர்களும், திமுக சார்பில் 3 உறுப்பிர்களும், சுயோச்சை 1 உறுப்பினர்களும் சேர்த்து 19 உறுப்பினர்கள்ஆதரவு இருப்பதால் ஆளுங்கட்சி சார்பில் பேரவைத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்படுபவர் எளிதாக வெற்றி பெறுவார். முதல்வரின் மக்களவை செயலர் லட்சுமிநாராயணன், துணை பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து இருவரில் ஒருவருக்கு அப்பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.