tamilnadu

புதுச்சேரியில் 10 ஆயிரத்தை நெருங்கியது வைரஸ் தொற்று

புதுச்சேரி, ஆக. 20- புதுச்சேரியில் ஒரே நாளில் அதிகபட்சமாக 554 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டதையடுத்து பாதிக் கப்பட்டோரின் எண்ணிக்கை 9,292ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள், மற்றும் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டோர் எண்ணிக்கை 3,521.  5,634 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி யுள்ளனர். இந்நிலையில் இந்திராகாந்தி கோவிட் மருத்துவமனை யில் 5 பேர், அரசு பொது மருத்துவமனையில் ஒருவர், ஜிப்ம ரில் ஒருவர், ஏனாம் அரசு பொது மருத்துவமனையில் ஒருவர்  என 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து  இறந்தவர்களின் எண்ணிக்கை 137ஆக உயர்ந்துள்ளது.