tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

புதுதில்லி,ஜூன் 27- தேசிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு வழங்கப் பட்ட அவகாசம் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப் படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய தேசிய கல்விக் கொள்கையை வகுப்ப தற்காக, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சமர்ப்பித்த தேசிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என தெரிவித்திருந்தது. இதற்கான அவகாசம் ஜுன் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
தமிழக எம்பிக்கள் கடிதம்
இந்நிலையில், காலஅவகாசத்தை ஆறுமாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. தமிழகத்தில் இந்திய மாணவர்  சங்கம், தமுஎகச, கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்பட பல்வேறு தரப்பின ரும் இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற னர். இதுதொடர்பாக புதனன்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரி யாலிடம் தமிழக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் அளிக்கப்பட்டது.

அமைச்சருடன் டி.கே.ரங்கராஜன், சு.வெங்கடேசன் சந்திப்பு
இந்நிலையில் ஜுன் 27 வியாழனன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவரும், மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை நேரில் சந்தித்து, தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை நாட்டின் அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும்; கல்வியாளர்களும், பொது மக்களும் மாநில அரசுகளும் கருத்துக் கூறுவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார். இம்மனுவில் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்த தமுஎகசவின் விமர்சனப் பார்வையும் இடம் பெற்றுள்ளன. இச்சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் டி.கே.ரங்கராஜன் கலந்து கொண்டார்.  தமிழில் வழங்க வலியுறுத்தல் தமுஎகச சார்பில் அமைச்சரிடம் சு.வெங்க டேசன் எம்.பி. அளித்த மனுவில், தேசிய கல்விக்  கொள்கை வரைவு அறிக்கையை தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகளிலும், பிராந்திய மொழிகளிலும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டிருந்தது. தேசியக் கல்விக் கொள்கை வரைவு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கும் அதன் பல்வேறு பிரிவுகளுக்கும் முரணாக அமைந்துள்ளது என்றும், தேசிய கல்வி  ஆணையம் என்ற அமைப்பை பிரதமர் தலைமை யில் உருவாக்குவது என்ற பரிந்துரை இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் இதனால் கல்வித்துறையில் மக்கள் நலன் சார்ந்து மாநிலத் தேவைகளை கருத்தில் கொண்டு சுயமாக முடிவெடுக்கும் உரிமையை மாநில அரசு முற்றிலு மாக இழக்கும் என்றும் விமர்சனம் இடம் பெற்றிருந்தது.

ஒருமாத காலம் நீட்டிப்பு
இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட  கேள்விக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளிக்கை யில், தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக்களை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப் படும் என்றும், ஜூலை 31-ம் தேதி வரை கருத்துக் களை பதிவு செய்யலாம் என்றும் அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசனை செய்த பிறகே, தேசிய கல்விக் கொள்கை வரைவு தயாரிக் கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ரமேஷ் பொக்ரியால், ‘2009 ஆம் ஆண்டில் இருந்தே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது, ஆனால், 2014க்கு பிறகுதான் தீவிரமாக நடைமுறைப்படுத்தப் படுகிறது’ என்று கூறினார்.