என்ற நோக்கத்துடனேயே முன்வைக்கப் பட்டிருப்பதால் இதனைச் செய்திடக்கூடாது.அஸ்ஸாம் மாநிலத்தில் மத நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றும், குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களைக் குறிவைத்துத் தாக்குதல்
தொடுத்திட அனுமதித்திடக் கூடாது என்றும் அஸ்ஸாம் மக்களிடம் இடதுசாரிக் கட்சிகள் கோருகின்றன.பாஜக அரசாங்கம், தேசியக் குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுதும் விரிவுபடுத்துவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. இதுவேண்டாத வேலை. மக்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியினரைக் குறி வைத்தும், மக்களிடையே மத மோதலை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்துடனும் இதனைச் செய்திட விரும்புகிறார்கள். இடதுசாரிக் கட்சிகள், குடிமக்கள் பதிவேடு நடைமுறையை, நாட்டின் இதரபகுதி களுக்கு எந்த வடிவத்தில் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்திடும். இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளன.