tamilnadu

img

“என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சாவர்க்கர் அல்ல” .. தில்லி பேரணியில் ராகுல் பேச்சு

புதுதில்லி:
என் பெயர் ராகுல் காந்தி, ராகுல் சாவர்க்கார்அல்ல என்று ராகுல் காந்தி கூறினார்.அரசின் பொருளாதார கொள்கைகளுக்குஎதிராக புதுதில்லியில் காங்கிரஸ் கட்சிசார்பில் `பாரத் பச்சாவோ` (இந்தியாவைகாப்போம்) பேரணி சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ராம்லீலாமைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்ராகுல்காந்தி உரையாற்றினார்.இந்த பேரணியில் அவர் உரையாற்றுகையில், ‘’நீங்கள் கூறிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என வெள்ளிக்கிழமை மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் கூறினார்கள். அதாவது உண்மையை பேசியதற்கு என்னை மன்னிப்பு கேட்க கூறினார்கள். என் பெயர் ராகுல் காந்தி. ராகுல்சாவர்க்கர் இல்லை. அதனால் நான் மன்னிப்புகோர மாட்டேன். காங்கிரஸை சேர்ந்த யாரும்மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’’ என்று ராகுல் காந்தி கூறினார்.இன்றைய நிலையில் ஜிடிபி நான்கு சதவீதமே உள்ளது. ஜிடிபி கணக்கிடும் முறையை பாஜக மாற்றியது. அப்படி மாற்றியே 4 சதவீதம்தான் உள்ளது. இதுவே பழையமுறையாய் இருந்தால் 2.5 சதவீதம் தான் ஜிடிபிஇருக்கும் என்று ராகுல் காந்தி கூறினார்.ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்குமாநிலங்களில் மதங்களை அடிப்படையாககொண்டு நாட்டை பிரித்து கொண்டிருக்கின்றனர். அசாம், மிசோரம், மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு போய் பார்த்தால் நரேந்திர மோடி அங்கே தீ மூட்டியிருக்கிறார் எனத்தெரியும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.‘’தொலைக்காட்சியில் முப்பது நொடிகள் தெரிந்தால் அதற்கு லட்சக்கணக்கில் செலவுசெய்யவேண்டியிருக்கும். ஆனால் மோடி நாள் முழுவதும் வருகிறார். இதற்கு எங்கிருந்து பணம் வருகிறது. மக்களின் பணத்தை எடுத்து யாரிடம் நரேந்திர மோடி தருகிறாரோ அவர்கள் கொடுக்கிறார்கள்’’ என்றுராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் ஆன்மாவை கிழித்த சட்டம்
பொதுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:  நாட்டில் குழம்பிய தலைவர், குழப்ப நிலைகாணப்படுகிறது.  அனைவருக்கும் வளர்ச்சி என்பது எங்கே இருக்கிறது என நாடு முழுவதும் கேட்கப்படுகிறது. இந்தியாவின் ஆன்மாவை கிழித்த, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்குஎதிராக நாட்டு மக்கள் போராடுவார்கள். ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம்ஆகியவற்றை காப்பதற்காக எழுச்சிபெற வேண்டியதருணமிது.  அநீதி மிகப்பெரிய குற்றம். அநீதிக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்.  காங்கிரஸ் கட்சி தனது காலடியை பின்னோக்கி வைக்காது, கடைசி மூச்சு உள்ளவரை போராடி நாடும், அதன் ஜனநாயகமும் காப்பாற்றப்படுவதற்கான கடமையை நிறைவேற்றும். நாட்டை காப்பதற்கான நேரம் வந்து விட்டது.  அதற்காக நாம் கடுமையாக போராட வேண்டும்.  நாடாளுமன்றம் பற்றியோஅல்லது அமைப்புகளை பற்றியோ மோடி மற்றும் அமித் ஷாவின் அரசாங்கம் கண்டுகொள்வதே இல்லை.  உண்மையான விசயங்களை மறைத்து விட்டு, மக்களை சண்டைபோட செய்வதே அவர்களின் ஒரே திட்டம்ஆகும்.  ஒவ்வொரு நாளும் அரசியல் சாசன விதிமீறலில் ஈடுபடும் அவர்களே அரசியல் சாசன தினமும் கொண்டாடுகின்றனர் என்றுசாடினார்.