புதுதில்லி, ஆக.19- வருமான வரித்துறை அதிகாரிகள், எடுத்த எடுப்பிலேயே, பணக்காரர்களி டம் சோதனைக்கு செல்லக் கூடாது என்று வருமான வரித்துறை ஆணையர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வருமான வரித்துறை, தனி அதிகா ரம் கொண்டதாக கூறப்பட்டாலும், நடை முறையில் அது ஆளும்கட்சியின் ஏவல் துறையாக இருக்கிறது என்ற விமர்சனம் நீண்டகாலமாக உள்ளது. குறிப்பாக, 2014-இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, எதிர்க்கட்சியினரை மிரட்டு வதற்கான துறையாகவே வருமான வரித் துறை மாற்றப்பட்டு விட்டதாக, அந்த குற் றச்சாட்டு மேலும் வலுவாக எழுந்துள்ளது. இந்நிலையில்தான் வருமான வரித் துறை ஆணையர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அதில், சோதனையின்போது, பணக்கா ரர்களிடம் தடாலடி காட்டக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்வோர் தங்களது ஆவணங்களில் கணிசமான வருமானத்தை மறைத்திருப்பதாக கண்ட றியப்பட்டால், அவர்களுக்கு நோட்டீ ஸைக் கூட உடனடியாக வழங்கக் கூடாது; மிரட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது; தொடர்புடையவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக தகவல் தெரிவித்து நினைவூட்டும் நடவடிக்கைகளில் ஈடு பட வேண்டும்; வருமான வரியில் இருந்து மறைக்கப்பட்டது பெரும் அளவிலான தொகை என்றால்தான் சோதனை நட வடிக்கைகளில் இறங்க வேண்டும்; அப் போதும்கூட உரிய அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.