புதுதில்லி:
பொதுத்துறையைச் சேர்ந்த 5 வங்கிகளின்பங்குகளை தனியாருக்கு விற்க மோடி அரசுமுடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் 7 பெரிய வங்கிகளாக உருவாக்கப்பட்டு, தேசிய அளவில் 8 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் காட்டப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னர் கூறியிருந்தார்.இந்தப் பெரும் இணைப்பால் உலகளாவிய வங்கிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு இந்திய வங்கிகள் உயரும் எனவும், இந்திய அளவிலும் உலக அளவிலும் போட்டியிட முடியும்எனவும் அவர் கூறியிருந்தார்.இதன்படி, யுனைட்டட் பேங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமெர்ஸ்,
சிண்டிகேட் பேங்க், கனரா பேங்க், அலகாபாத் பேங்க், ஆந்திரா பேங்க், கார்ப்பரேசன் பேங்க் உள்ளிட்ட 10 வங்கிகள் இணைக்கப் பட்டு, வெறும் நான்கு வங்கிகள் ஆக்கப்பட்டன.
இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கிகளில் பாதியை தனியார் மயமாக்கிவிட வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் கொள்கை முடிவு.இதன்படி, செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யூசிஓ பேங்க்,பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்த்பேங்க் ஆகிய வங்கிகளின் பங்குகள் கொஞ்சம்கொஞ்சமாக விற்பனை செய்யப்பட்டு, இறுதியில் முழுவதுமாகவே தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் தற்போதைய நிலையில் 12 பொதுத் துறை வங்கிகள் இருக்கும் நிலையில், அதில்பாதிக்கும் மேலான வங்கிகளை தனியாரிடம்ஒப்படைக்கப்படும். நான்கு அல்லது ஐந்து பொதுத் துறை வங்கிகள் இருந்தால் போதும் என்று மோடி அரசு முடிவுசெய்துள்ளதாக அரசுத்துறையிலுள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.மேலும், வங்கித் துறையை தனியார் மயமாக்கும் இந்த நடவடிக்கைக்காக, மோடிஅரசு புதிதாக ஒரு தனியார்மயக் கொள்கையையே உருவாக்கி வருவதாகவும், அதனைவிரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப் போவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட் டுள்ளார்.