tamilnadu

img

பணம் பறிக்கும் குண்டர்களாக மாறிய மோடி அரசின் தில்லி காவல்துறை

தில்லியில் தற்பொ ழுது சிறப்பு சட்ட மன்ற கூட்டம் நடை பெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் பொழுது ஆம் ஆத்மி எம்எல் ஏக்கள் மோடி அரசின் கட்டுப் பாட்டில் உள்ள தில்லி காவல் துறை மீதும், துணை நிலை ஆளுநர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ பீஜ்வாசன் பி.எஸ்.ஜூன், சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசுகையில்,”தில்லி நகரத் தில் வணிகர்கள் மிகுந்த சிரமத் திற்கு உள்ளாகி வருகின்றனர். தொழில் செய்யவே அவர்கள் அஞ்சுகின்றனர். இதற்கு கார ணம் மோடி அரசின் கட்டுப்பாட் டில் உள்ள தில்லி காவல்துறை குண்டர்கள் மூலமாக மறை முகமாகவும், நேரடியாகவும் வணிகர்களை மிரட்டி பணம் பறிப்பது தான். நாள்தோறும் தில்லி நகர சாலையில் உள்ள வணிகர்களை மிரட்டி மாமூல் வசூலிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறை மீது தில்லி மக்க ளுக்கு  நம்பிக்கை இல்லை. இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க காவல் நிலைய அள விலான குழுக்களை புதுப் பிக்க வேண்டும். ஆனால் துணை ஆளுநர் இந்த விவகா ரத்தை  கண்டுகொள்ளாமல் பணம் பறிக்கும் சம்பவங்க ளுக்கு ஆதரவாக இருப்பது போன்று எவ்வித உத்தரவும் பிறப்பிக்காமல் உள்ளார். இது கண்டனத்துக்குரியது ஆகும்” என அவர் குற்றம் சாட்டினார்.

இதே போன்று தில்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ், ”தில்லி காவல்துறையின் நிலைமை கவலை அளிப்ப தாக உள்ளது. குற்றச் சம்ப வங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையங்க ளில் புகாரளிக்கத் தயங்கு கின்றனர். தில்லியில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடான நிலை யில் இருக்கின்ற சூழலில், காவல்நிலைய அளவிலான குழுக்கள் ஏன் அமைக்கப்பட வில்லை என்பது குறித்து துணை ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும்” என அவர் கூறினார்.