புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம், பிதாரிசெயின்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் ராகேஷ் மிஸ்ரா. இவர், காதல் திருமணம் செய்துகொண்ட தனது மகள் சாக்ஷிமிஸ்ராவையும் (23). அவரதுகணவரும் தலித் வகுப்பைச்சேர்ந்தவருமான அஜிதேஷ்குமாரையும் (29) படுகொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். இதற்காக கூலிப்படையையும் ஏவி விட்டுள்ளார்.
தந்தையின் இந்த செயலால் அச்சமடைந்த மகள் சாக்ஷி மிஸ்ரா, தங்களுக்கு நேர்ந்துள்ள ஆபத்தை சமூகவலைத்தளங்களில் வீடியோபதிவு வெளியிட்டு பகிரங்கப்படுத்தினார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருபுறம் ராகேஷ் மிஸ்ராவுக்கு மக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்ததுடன், சாக்ஷி மிஸ்ரா - அஜிதேஷ் குமார் தம்பதிக்கு ஆதரவுக் குரல்களும் உயர்ந்தன.இந்நிலையில், சாக்ஷி மிஸ்ராவின் புகார் குறித்து, ஊடகங்கள் நேரடியாகவே அவரைப் பேட்டி கண்டுள்ளன. அதில், சமூகவலைத் தளத்தில் வெளியிட்ட வீடியோபதிவு மூலமாக, தற்போதுதங்களுக்கு பாதுகாப்பானசூழல் உருவாகியுள்ளதாகவும், தற்போது பயமின்றி பாதுகாப்புடன் இருப்பதாக உணர்வதாகவும் சாக்ஷி மிஸ்ரா கூறியுள்ளார். மேலும், “பிரதமர் மோடி,தனது தந்தை ராகேஷ் மிஸ்ராவை நேரில் அழைத்துப் பேசிஅவரின் மனநிலையை மாற்றவேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.