புதுதில்லி:
பாஜக வெல்வதும், மோடி மீண்டும் பிரதமராவதும் இந்தியாவின் ஜனநாயகத்திற்கே ஆபத்து என்று, உலகின் புகழ்பெற்ற ‘தி எகனாமிஸ்ட்’ பத்திரிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
2019 மக்களவைத் தேர்தல், இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றுவதற்கான போராட்டம் என்றும் அந்த பத்திரிகை வர்ணித்துள்ளது.
“மோடி தலைமையிலான ஆளுங்கட்சி, இந்தியாவின் ஜனநாயகத்தின் அச்சுறுத்தலாக திகழ்கிறது. இந்து தேசியத்திற்கான மோடியின் கடுந்தன்மை வாய்ந்த அடையாளம் என்பது, பாகிஸ்தான் என்ற நாட்டை ஒரு வியூக எதிரியாக- குறைவான அளவில்தான் அடையாளப்படுத்துகிறது; மாறாக, அது கலாச்சாரம் என்பதைத்தான் பெரிய எதிரியாக முன்னிறுத்துகிறது. இந்த நிலையானது மோடியின் சொந்தக் கட்சியான பாஜக-விலேயே அவரை ஒரு ஒரு விளிம்பில் கொண்டு வைத்துள்ளது. இந்துத்துவா இயக்கம் என்பது தற்போது மதிப்பிடும் கணத்தை எதிர்கொள்கிறது” என்றும் ‘தி எகனாமிஸ்ட்’ குறிப்பிட்டுள்ளது.