tamilnadu

img

மேட்டுப்பாளையம்...கட்டிட உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது

கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளை யம் நடூரில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தில், தலைமறைவாக இருந்த கட்டிட  உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். நடூர் கிராமத்திலுள்ள ஏடி காலணியில் சக்கரவர்த்தி துகில் மாளிகை என்ற துணி கடையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் வீட்டின் 15 அடி உயர சுற்றுச் சுவர் அதிகாலையில் இடிந்து விழுந்து, 17 பேர் பலியாகினர். மரணத்திற்கு காரணமான சிவசுப்பிரமணியம் மீது நடவடிக்கைக எடுக்க வலியுறுத்தி மக்கள்  போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து  பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அலட்சியமாக விபத்து ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிவசுப்பிர மணியம் மீது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை, 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.இந்த நிலையில் சிறுமுகை அருகே தலைமறைவாக இருந்த சிவசுப்பிர மணியத்தை தனிப்படை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.