tamilnadu

கொரோனாா சிகிச்சை மையங்களாக மாறும் திருமண மண்டபங்கள்

புதுச்சேரி, ஜூலை 26- புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களை கொரோனா  சிகிச்சை மருத்துவமனைகளாக மாற்ற ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார். இதுகுறித்து அவர் ஞாயிறன்று செய்தியாளர்களிடம்  கூறியதாவது: சட்டமன்ற உறுப்பினர்  ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளார். இதனால்  அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரி சோதனை செய்யப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். அதன்படி  5 நாட்களுக்கு பிறகுதான் பரிசோதனை செய்ய வேண்டும். இதனால் 29ஆம்  தேதி கொரோனா பரிசோதனை செய்யப்படும். தினசரி 130, 140 பேர் புதி தாக தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அடுத்த 2 அல்லது 3 நாட்களில்  கொரோனா தொற்றால் தினசரி 200 பேர் பாதிக்கப்படுவார்கள். தற்போது உடனடியாக 500 படுகைகள் தேவைப்படுகிறது என முதல்வரை சந்தித்து தெரிவித்துள்ளேன்.

இதற்கு ஏற்பாடு செய்வதாக அவரும் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் கண்டிப்பாக 6 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.  அப்படி பாதிப்பு ஏற்பட்டால் குறைந்தபட்சம் 2 ஆயிரம் படுகைகள் தேவைப்படும். பள்ளிக் கல்வி இயக்குநர், உயர்க்கல்வி இயக்குநர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு  அமைத்து, எத்தனை மாணவர்கள் விடுதிகள் உள்ளன.  அங்கு அங்கு எத்தனை படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்ய முடி யும் என ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல் தனியார் திருமண  மண்டபங்களை மருத்துவமனையாக மாற்றுவதற்கும், அதற்கு தேவை யான உபகரணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன. வாரத்திற்கு ஒரு முறை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தினால் கொரோனா தொற்று குறைய வாய்ப்புள்ளது. எனவே, வணிகர்கள் மற்றும்  பொதுமக்கள் சிந்தித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.