tamilnadu

img

மன்மோகன் சிங் விடைபெற்றார்?

புதுதில்லி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், அவரின் 30 ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் வாழ்க்கை, வெள்ளிக்கிழமையோடு முடிவுக்கு வந்துள்ளது.2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் தலைவராகவும் இந்தியாவின் பிரதமராகவும் பதவி வகித்தவர் மன்மோகன் சிங். இவர், கடந்த 1991-ஆம் ஆண்டு அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு, அந்த மாநிலத்திலிருந்தே தொடர்ந்து, மாநிலங்களவைக்கு தேர்வாகி வந்தார். இந்நிலையில்தான் அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.

தற்போதைக்கு, மன்மோகன் சிங்கை மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்க முடியாத நிலை காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளதால், அவர் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வழக்கமாக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்து வந்த அசாம் மாநிலத்தில் காங்கிரசுக்கு 25 எம்எல்ஏ-க்கள்தான் இருக்கின்றனர். ஆனால், மன்மோகனை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் 43 எம்எல்ஏ-க்கள் தேவை. மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகும், ஒடிசா, தமிழ்நாடு, பீகார், குஜராத் மாநிலத்திலும் மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட முடியாத நிலையே உள்ளது.