tamilnadu

img

குறைவான கூலி, அதிகரிக்காத வேலைவாய்ப்புகள், அள்ளிக்குவித்த முதலாளிகள் வெற்றுக் கோஷமான அனைவருக்குமான வளர்ச்சி

புதுதில்லி, ஏப். 22 -‘பொருளாதார வளர்ச்சிஎன்பது அனைவருக்கான தாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும்’ எனும் வாக்குறுதியை அளித்துத் தான், கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.மேடைக்கு மேடை, ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ (ளுயமெய ளுயயவா, ளுயமெய ஏமையள) என்று மோடி முழங்கியதை மக்களும் அப்போது நம்பினர். ஆனால், கடந்த 5 ஆண்டுமோடி ஆட்சியில் அனை வருக்குமான பொருளாதார வளர்ச்சி கொஞ்சமாவது நடந்தேறி இருக்கிறதா? என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. இதுபற்றிய புள்ளி விவரங்களும், விவாதங்களும் தற்போது வெளியாகியுள்ளன.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (ருஞஹ ஐ, ருஞஹ ஐஐ) 2004 - 2014வரை பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தது. இதில், 2004முதல் 2009 வரை இடதுசாரி களின் ஆதரவோடு ஆட்சி நடைபெற்றபோது, நாட்டின் பொரு ளாதார வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 8.4 சதவிகிதமாக இருந்தது. எனினும் இந்த வளர்ச்சி போதுமானது அல்ல என்றே அப்போதைய பொருளா தார வல்லுநர்கள் தெரிவித்தனர். வேலைவாய்ப்புக்களை பெருக்கக் கூடிய, ‘அனைவரை யும் உள்ளடக்கிய வளர்ச்சி’ தேவை என்று அன்றையப் பிரத மர் மன்மோகன் சிங் கூறினார்.எனினும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின், 2009 முதல் 2014 வரையிலான இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி சரிவைச் சந்தித்தது.


அந்த ஐந்தாண்டுகளில் ஆண்டு சராசரி வளர்ச்சி 7.2 சதவிகிதமாக குறைந்தது. இந்த காலத்திலும் வேலைவாய்ப்பு அதிகரிக்கவில்லை.ஆனால், 2014 முதல் 2019 வரையிலான மோடியின் 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில், நாட்டின்பொருளாதார வளர்ச்சியின் சராசரி 7.4 சதவிகிதம் என்று கூறப்படுகிறது. முதலில் இது உண்மைதானா? என்பது தனி ஆய்வுக்கு உரியது. உண்மை என்றே எடுத்துக் கொண்டாலும், இந்த வளர்ச்சி யால் சாதாரண மக்கள் யாரும்பயனடைந்தார்களா? என்பது தான் கேள்வியாக இருக்கிறது.2014 - 2019 காலத்தில் நாட்டின் தனிநபர் வருமானம் சராசரியாக 6 சதவிகிதம் வளர்ந்திருக்கிறது. இதே காலத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் நிஜக்கூலியும் கூட (விலைவாசி போகக் கையில் மிஞ்சும் கூலி) 3 சதவிகிதத்தை தாண்டியிருக்கிறது என்று கூறப்படு கிறது. ஆனால், நேரடி வரிவருவாயில் இது கொஞ்சமும் எதி ரொலிக்கவில்லை என்பதை பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.நேரடி வரி வருவாய் செலுத்து வோரில், மேல்தட்டில் இருக்கும் 10 சதவிகிதத்தினர் (ஆண்டுக்கு ரூ. 500 கோடிக்குமேல் சம் பாதிப்பவர்கள்) அளிக்கும் பங்கு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேரடி வரியைச் செலுத்துவோரில், இந்த 10 சதவிகிதத்தினரின் பங்கு மட்டும் 2014-15-இல் 56.2 சதவிகிதத்தில் இருந்து, 2017-18-இல் 58 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.ஆனால், இடையே இருக்கும் 40 சதவிகிதத்தினரின் பங்குமாறாமல் அப்படியே இருக்கிறது.


இதே காலத்தில், அடித்தட்டில் இருக்கும் 50 சதவிகித நேரடி வரி செலுத்தும் மக்களின் பங்கு 17.6 சதவிகிதத்திலிருந்து 16 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார ஆய்வாளர் ரோஹித் ஆசாத்.ஆக்ஸ்பாம் (டீஒகயஅ) எனும் தன்னார்வ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி 2016-இல் மேல்தட்டில் இருக்கும் 1 சதவிகித பணக்காரர்கள், இந்திய நாட்டின் மொத்த தனிநபர்சொத்து மதிப்பில் 58 சதவிகிதத்திற்கு சொந்தக்காரர்களாக இருந்தனர். அடித்தட்டில் உள்ள 70 சதவிகிதத்தினரிடம் வெறும் 7 சதவிகிதம் செல்வம் மட்டுமே இருந்தது. இது முக்கியமானது.இவ்வாறு குறைவான கூலி, பெருகாத வேலைவாய்ப்புகள், நேரடி வரி செலுத்தும் மக்கள்தொகையில் பெரும்பான்மை யானவர்களின் பங்கு குறைந்திருப்பது, பெரும் சொத்துக் குவிப்பு ஆகிய அம்சங்களை எல்லாம் வைத்துப் பார்த்தால், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி நடைபெறவில்லை என்பதையே இவை காட்டுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.