tamilnadu

img

வாக்குப்பதிவின் போதும் பணம் கொடுத்த பாஜக...

பெங்களூரு:
காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளைச் சேர்ந்த 15 எம்எல்ஏ-க்கள், கடந்த 2019 ஜூலையில், திடீரென பாஜகவுக்கு ஆதரவாக மாறினர். இதனால், குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- ஜேடிஎஸ் ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி ஏற்பட்டது.முன்னதாக, பாஜக-வுக்கு சாதகமாக மாறிய 15 எம்எல்ஏ-க்களையும் சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்ததால், காக்வாட், அதானி, கோகக், யெல்லபுரா, ராணிபென்னூர், விஜயநகர, சிக்கல்பல்லபுரா உள்ளிட்ட 15 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டன.இந்த 15 தொகுதிகளுக்கும் வியாழனன்று (டிசம்பர் 5) இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனிடையே, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு, இடைத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், பாஜகவினர் வாக்காளர் களுக்கு தாராளமாக பண விநியோகம் செய்துள்ளனர். அதுவும்வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும்போதே இந்த பணவிநியோகத்தை நடத்தியுள்ளனர். அதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.