tamilnadu

img

சொந்த நாட்டு மக்களையே இந்திய அரசு அச்சுறுத்துகிறது... அமெரிக்க செனட்டர்கள், ஜனாதிபதி வேட்பாளர்கள் குற்றச்சாட்டு

புதுதில்லி:
தில்லியில் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைஅமெரிக்க அரசியலிலும் புயலைக் கிளப்பி இருக்கிறது. குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில் இந்த வன்முறை நடந்ததும், இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, டிரம்ப் மழுப்பலாக அளித்த பதிலும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

டிரம்பின் வெளியுறவுக் கொள்கை சரியில்லை. அவர் இந்திய அரசை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார். கலவரத்தை அவர் கண்டிக்கவில்லை. இந்தியாவுடன் அவரது உறவு ஆக்கப்பூர்வமான தாக இல்லை. தேர்தல் சார்ந்ததாக, விளம்பரம் சார்ந்ததாக மட்டுமே உள்ளது என்று அங்குள்ள எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளன.ஜனநாயகக் கட்சி சார்பில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும், பெர்னி சாண்டர்ஸ், “தில்லிவன்முறையானது, தலைமைத்துவத்தின் தோல்வி” என்று டிரம்ப்- மோடி ஆகிய இருவரையுமே மறைமுகமாக குறிப்பிட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு விமர்சனம் வைத்திருந்தார். தற்போது, மேலும் பல அமெரிக்கத் தலைவர்களும் தில்லி வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“இந்தியாவில் நடக்கும் வன்முறையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று, அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரன் கண்டித்துள்ளார்.“தில்லியில் நடக்கும் விஷயங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இது மிகப்பெரிய எச்சரிக்கை மணி. இரண்டு நாட்டு உறவில்இதுபோன்ற வன்முறைகள் பெரிய பாதிப்புகளை கண்டிப்பாக ஏற்படுத்தும்” என்று மற்றொரு செனட்டரான மார்க் வார்னர் குறிப்பிட்டுள்ளார்.“தில்லியில் நடக்கும் வன்முறை கவலை அளிக்கிறது. இந்தியாவில் மத வெறியும், இன வெறியும் உச்சம் அடைந்துள்ளது. அங்கு பன்முகத் தன்மை குறைந்துவிட்டது. மதச் சுதந்திரம் போய்விட்டது. பொது இடத்தில் கூட மோசமான வன்முறைகள் போலீஸ் முன்னிலையில் நடக்கின்றன” என்று, அமெரிக்க எம்.பி. ஜேமி ரஸ்கின் கூறியுள்ளார். 

“இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்ற னர். அவர்கள் எல்லோரும் அந்நாட்டின் குடிமகன்கள். ஆனால், அரசு அவர்களை அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது. தங்களின் அரசியல் லாபத்திற்காக இவ்வாறு செய்துள்ளது” என்று அமெரிக்க வெளிநாட்டு கவுன்சில் தலைவர் ரிச்சர்ட் என் ஹாஸ் குறிப்பிட்டுள்ளார்.ஜனநாயக கட்சியின் மற்றொரு ஜனாதிபதி வேட்பாளரான துளசி கப்பார்ட்மட்டும், கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அவர், பாஜகவிற்குநெருக்கமானவர் என்றும், அவரின் தேர்தல் செலவுக்கு பாஜக நிதியுதவி செய்வதாகவும் ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது. இது ஜனநாயக கட்சிக்குள் அவருக்கு பின்னடைவையும் அளித்துள்ளது. மோடியை எதிர்க்கும் இடது சாரி சிந்தனை கொண்ட பெர்னி சாண்டர்ஸ் முன்னிலை வகித்து வருகிறார்.