டேராடூன், மே 26- உத்தரகண்ட் மாநிலம் முசோரி தொகுதியின் பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் கணேஷ் ஜோஷி. பாஜக வைச் சேர்ந்த இவர், கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுபவர் களை கௌரவிக்கப் போகிறேன் என்ற பெயரில், கடந்த வெள்ளிக் கிழமையன்று நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது அவர், ‘ஸ்ரீ மோடிஜி கி ஆர்த்தி’ (Shri Modiji Ki Aarti) என்ற பெயரில் பிரதமர் மோடிக்கு சிறப்பு வழிபாடு ஒன்றை அறி வித்ததோடு, பொதுமுடக்கம் நிறை வடைந்ததும் மோடிக்கு சிலை அமைத்து கோயில் கட்டப்போகும் தகவலையும் வெளியிட்டுள்ளார். இது தற்போது சர்ச்சையாகி உள்ளது. அனுமனை வழிபட ‘’அனுமன் ஆர்த்தி’’ என்ற சிறப்பு வழிபாடு நடத்துவது, வடமாநிலங்களில் பிர பலமானது. ஆனால், தற்போது “மோடி ஆர்த்தி” அறிவித்திருப் பது, அனுமன் வழிபாட்டிற்கு போட்டி போலவும், அந்த விழாவின் புனிதத்தை கொச்சைப்படுத்துவது போலவும் உள்ளது என்று இந்துக் கள் மத்தியிலிருந்தே விமர்சனங் கள் எழுந்துள்ளன.
யாரையும் கடவுளுடன் ஒப்பிட முடியாது. ஆனால், மோடிக்கு கட வுளுக்கு இணையான விளம்பரம் தேடுவதில் பாஜகவினர் ஈடுபட் டுள்ளனர். இதற்குரிய ஆர்வத்தை கொரோனா நெருக்கடியைச் சமா ளிக்கும் விஷயங்களில் காட்டினால் நன்றாக இருக்கும் என்று எதிர்க் கட்சிகள் சாடியுள்ளன. ஆனால், எந்த விமர்சனம் வந்தா லும், பொதுமுடக்கத்துக்கு பிறகு மோடிக்கு சிலையுடன் அவருக்கு கோயில் கட்டப்போவது உறுதி என்று பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி கூறியுள்ளார். தற்போதே தனது வீட்டு பூஜை அறையில், மோடியின் புகைப்படத்தை வைத்து கடவுளுக்கு இணையாக வழிபட்டு வருவதாகவும் கூறி யிருக்கும் அவர், “மோடி வழிபாடு” துவங்குவதில் எந்தத் தவறும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.