tamilnadu

img

இருண்ட சக்திகளை முறியடிக்க நற்சிந்தனையாளர்கள் திரள வேண்டும்!

புதுதில்லி:
இந்தியா ஒரு ஆழமான நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், இருண்ட சக்திகளை முறியடிக்க சரியான முறையில் சிந்திக்கும் நற்சிந்தனையாளர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.மறைந்த காங்கிரஸ் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி குறித்த நினைவுக் கூட்டம், புதுதில்லியில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து. ராஜா, காங்கிரஸ் தலைவர்கள் மணிசங்கர ஐயர், சுபாத் காந்த் சகாய் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில் பங்கேற்று உரையாற்றும் போதே மன்மோகன் சிங் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “இந்தியா என்ற கருத்து நீண்ட காலம் இருக்க வேண்டுமானால் ‘நற் சிந்தனையாளர்கள்’ அனைவரும் குரல்களை எழுப்ப வேண்டும்” என்றும்அறைகூவல் விடுத்துள்ளார்.மேலும், “ஜம்மு - காஷ்மீருக்கு மத்திய அரசு செய்திருப்பது நாட்டு மக்களில் பலரின் எதிர்ப்பையே பெற்றுள்ளது” என்று கூறியுள்ள மன்மோகன் சிங், “அந்த மக்களின் குரல்களும் கேட்கப்பட வேண்டும்” என்றும்,“நம் குரல்களை உயர்த்துவதன் மூலம்தான் இந்தியா என்ற கருத்தை நாம் நீண்ட காலத்துக்கு தக்கவைக்க முடியும்” என்றும் தெரிவித்துள்ளார். “இது நமது புனித கடமை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.