புதுச்சேரி, ஜூன் 26- அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்று தையல் கலைஞர்கள் சம்மேள னத்தின் மாநிலக்குழு வலியுறுத்தி யுள்ளது. சிஐடியு தையல் கலைஞர்கள் சம்மேளனத்தின் தமிழ்நாடு -புதுச் சேரி மாநிலக்குழுக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. சங்கத்தின் புதுச்சேரி பிரதேசச் செயலாளர் கே.தியாகராஜன் தலைமை தாங்கினார். சம்மேள னத்தின் தமிழ் மாநில துணைத் தலைவர் டி.ஏ.லதா கூட் டத்தை துவக்கி வைத்தார். சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஐடாஹெலன், தலை வர் பி.சுந்தரம்,புதுச்சேரி தலைவர் எம்.கலைவாணி,துணைத் தலைவர் எஸ்.மணிபாலன் உட் பட தமிழகம்,புதுச்சேரி மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர். தையல் கலைஞர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழி லாளர்களுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். அனைத்து தையல் கலைஞர்க ளுக்கும் வங்கி மூலம் கடன் வழங்க வேண்டும். இலவச மின் சாரம் வழங்க வேண்டும். புதுச்சேரி அரசு தையல் கலை ஞர்களுக்கு தனி நலவாரியம் ஏற்படுத்தி ரூ.10 கோடி நிதி ஒதுக்க வேண்டும். தீபாவளி உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.