tamilnadu

தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு மூலமே பணியாளர்கள் தேர்வு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்

செங்கல்பட்டு, பிப்.27- நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் தேர்ந்தெடுக் கப்பட்ட நிர்வாகக்குழு மூலமே பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என கைத்தறி சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்தி யுள்ளது.  இது குறித்து தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழி லாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.முத்துக்குமார் வெளி யிட்டுள்ள அறிக்கை வரு மாறு:- கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கான ஊழியர்கள் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளி யிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.  மாநிலம் முழுவதுமான ஊழியர்களுக்கான தேர்வு தமிழக கைத்தறித்துறை அதி காரிகள் மட்டுமே ஒரே மையமாக தேர்வு செய்வதை தமிழ்நாடு கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சம்மேள னம் (சிஐடியு) ஆட்சேபனை தெரிவித்துக் கொள்கிறது. கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகள் பங்கேற்பு இல்லாமல் மாநிலத்தில் மொத்தமாக ஒரே இடத்தில் தேர்வு செய்வது இதற்குமுன் இல்லாத நடைமுறை. மேலும் இது கூட்டுறவு அமைப்பு களின் ஜனநாயகத் தன்மைக்கு  விரோதமானது. சம்பந்தப்பட்ட கைத்தறி சரக அதிகாரிகள் ஆலோ சனையுடன், சம்பந்தபட்ட  தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு மூலமே தனக்கு தேவையான பணி யாளர்களை தேர்வுசெய்யும் நடைமுறையை பின்பற்ற  தமிழக கைத்தறி துணி நூல் துறை முன்வரவேண்டும் என தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்துகிறது.  இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.