tamilnadu

img

செலவுகளைச் சமாளிக்க நகைகளை விற்கும் இந்தியர்கள்.... பொதுமுடக்கம், வேலை-வருவாய் இழப்பால் பாதிப்பு

புதுதில்லி:
கொரோனா பொதுமுடக்க பாதிப்புகளால் இந்தியாவில் கோடிக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். வருவாய் இழப்பையும் சந்தித்துள் ளனர். 

இதனால், தங்களின் அன் றாட உணவு, வீட்டு வாடகை உள்ளிட்ட தேவைகளைக் கூட சமாளிக்க முடியாமல் பெரும் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், அமெரிக்காவின் ‘வால்ஸ்ட்ரீட் ஜெர்னல்’ பத்திரிகை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், இந்திய மக்கள் தங்களின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, குடும்ப நகைகளை விற்கத் தொடங்கி உள்ளதாக கூறியுள்ளது.“கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு, அதன்விளைவாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மக்களை பெரும் அவதிக்குள்ளாகி வருகிறது. இந்த வீழ்ச்சிக்கு மத்தியில் மக் கள் தங்கம் வாங்குவதைக் குறைத்து, குடும்ப நகைகளை விற்கத் தொடங்கி உள்ளனர்” என்று வால்ஸ்டிரீட் ஜெர்னல் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள். கொரோனா தொற்று நோய் மற்றும் அரசியல் நிலவரம் காரணமாக முதலீட்டைத் தங்கத்துக்கு மாற்றுகின்றனர். தங்க நாணயங்கள், தங்கக்கட்டிகள் மற்றும் வர்த்தகநிதிகளில் செலவிடுகின்றனர். ஆனால், இந்தியர்களோ பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க வளையல்கள், மோதிரங் கள் உள்ளிட்ட குடும்ப நகைகளை விற்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.