tamilnadu

img

இந்திய குடும்பங்களின் சேமிப்பும் குறைந்தது... கடனாளிகள் ஆவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுதில்லி:
இந்தியாவில் சாமானிய மக்களின் சேமிப்பு சரிவைச் சந்தித்துள்ளதாக ஆய்வுகள் வெளியாகி யுள்ளன.இந்தியாவின் சாமானியக் குடும்பங்கள் தங்களின் வருவாயில் சுமார் 60 சதவிகிதத்தை சேமிப்பு செய்யும் பழக்கம் கொண்டவர்கள் என்றும், ஆனால் தற் போது அந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக சந்தை ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜிடிபி-யில் மொத்த சேமிப்பின் அளவு 2007-08ஆம் ஆண்டு 36 சதவிகிதமாக இருந்தது. கடந்த 2012-ஆம் ஆண்டில் கூட 34.6 சதவிகிதமாக  சேமிப்பு இருந்தது. ஆனால், 2019-ஆம் ஆண்டில் இதன் அளவு 30.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என மத்திய புள்ளியியல் அமைப்புதெரிவித்துள்ளது.இதேபோல, இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவை எடுத்துக் கொண்டால், 2012-ஆம் ஆண்டு, இந்தியாவின் ஜிடிபி-யில் 23 சதவிகிதமாக இருந்த சேமிப்பு, 2019-இல் 18 சதவிகிதமாக குறைந்துள்ளது. மக்களின் சேமிப்பு குறை வதன்மூலம், மத்திய அரசு வெளிநாட்டு வங்கி மற்றும் முதலீட்டா ளர்களி டம் இருந்து வாங்கும் கடனின் அளவு அதிகரிக்கும். ஏற்கெனவே, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவின் மொத்த கடன் 2015-ஆம் ஆண்டில் 475 பில்லியனாக இருந்த நிலையில் தற்போது 543 பில்லி யனாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சேமிப்பு குறைவு மேலும் பாதிப்பை ஏற் படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்த சூழலில், சேமிப்புக்களை ஊக்குவிக்க வேண்டிய மோடி அரசு, அதற்குமாறாக, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் சேமிப்புக்கான வட்டி விகிதங்களை குறைத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.