புதுதில்லி:
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,152 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 273 இல் இருந்து 308 ஆக உயா்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 756 இல் இருந்து 857 ஆக உயந்துள்ளது என மத்திய சுகாதாரத் றை அமைச்சகம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை மாலை ஐந்துமணி நிலவரம்:-
மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 1,975 போ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். உயிரிழப்பும் அந்த மாநிலத்தில்தான் மிக அதிகமாக 149 ஆக உள்ளது.கொரோனா நோய்த்தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தில்லி இரண்டாமிடத்திலும் தமிழகம் இரண்டாம் மூன்றாம் இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1075 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்பு 11 ஆக அதிகரித்துள்ளது.
\தில்லியில் 1,176 பேருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 24 போ் உயிரிழந்துவிட்டனா். குஜராத் மாநிலத்தில் 539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளனர் , மத்தியப் பிரதேசத்தில் 604 பேர் பாதிக்கப்பட்டுள்ளளனர். 43 பேர் உயிரிழந்துள்ளனர், பஞ்சாபில் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துவிட்டனா்.தெலுங்கானாவில் 562 பேருக்கும், ஆந்திராவில் 432 பேருக்கும், ராஜஸ்தானில் 804 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 491 பேருக்கும், கேரளத்தில் 384 பேருக்கும், குஜராத்தில் 539 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 857 போ் கரோனாவில் இருந்து மீண்டு, வீடு திரும்பியுள்ளனா். 308 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் மட்டும்தான் கொரோனா நோய்த்தொற்று குறைவாக உள்ளது. அங்கு மணிப்பூரில் இருவருக்கும், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மிஜோரம் ஆகிய மாநிலங்களில் ஒருவர் அல்லது இருவருக்கு மட்டுமே கொரேனா உறுதியாகியுள்ளது. மேகாலயத்தில் மட்டும் இதுவரை யாருக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை. இந்தியாவில் கொரானோ நோய்த்தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.