தில்லி
ஆசியாவின் கொரோனா மையமாக உள்ள இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 60 ஆயிரத்தை தாண்டி பயணித்து வருகிறது. இதனால் இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிய உச்சமாக 69,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 21.56 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் 920 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 43 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது. 52,135 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில், கொரோனாவை வென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 14.81 லட்சமாக உயர்ந்துள்ளது.
இன்னும் 6.31 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல் இதே நிலையில் நீடித்தால் உலகின் கொரோனா மையமாக இந்தியா விரைவில் உருவாகும் நிலை ஏற்படும்.