புதுதில்லி:
இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் நிலையில்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று பொருளாதாரத்திற்கான ‘நோபல் பரிசு’ பெற்ற அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி விமர்சித்துள்ளார்.
நோபல் பரிசு அறிவிப்புக்குப் பின்னர்‘மசாசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ நிறுவனத்திற்கு அபிஜித் பானர்ஜிபேட்டியளித்துள்ளார். அதில், மேலும் அவர் கூறியிருப்பதாவது:
“இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. 2014-2015, 2017-2018 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்துபொருளாதாரம் சரிந்து வந்துள்ளது. மக்களிடம் வாங்கும் சக்தியே இப்போதுகுறைந்து விட்டது. இதுபோன்ற விஷயங்கள் எப்போதாவதுதான் நடக்கும். இப்போது அது நடந்து வருகிறது. இதுமிக மோசமான அறிகுறி. இது இந்தியாவுக்கு வெளிப்படையான எச்சரிக்கையும் ஆகும். இந்தியப் பொருளாதாரம் வேகமாக சரிந்து வருவது குறித்து, நாடு முழுவதும் பெரும் விவாதங்கள் நடந்து வருகின்றன. அரசும் பாதிப்பை உணர்ந்துள்ளது. ஆனால், புள்ளி விவரங்களை ஏற்றுக்கொள்வது கிடையாது. அரசுக்கு எதிராக வரும் புள்ளி விவரங்களை பொய் என்று சொல்லப்படுகிறது. அது சரியல்ல. இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதை அரசு ஏற்க வேண்டும். பிரச்சனையை ஒப்புக்கொண்டு நடவடிக்கையில் இறங்க வேண்டும்.மாறாக, பட்ஜெட் இலக்கு, நிதிஇலக்கு என்று சிலவற்றை பட்ஜெட்டில்இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது. பொருளாதாரத்தில் நிதி ஸ்திரத்தன்மை என்பதை விட தேவை என்பது மிகப்பெரிய பிரச்சனை. அதைத்தான் இந்தியா தற்போது சந்தித்துக் கொண்டு இருக்கிறது.இவ்வாறு அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.