நாடாளுமன்ற கேண்டீனில் ‘கதா’ (Kadha) என்ற புதிய வகை தேநீர் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. துளசி, இலவங்கப் பட்டை, கறுப்பு மிளகு, காய்ந்த இஞ்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்களினால் தயாரிக்கப்படும் இந்த தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆயுஷ் அமைச்சகம்பரிந்துரைத்துள்ளது. ஒரு குவளை ரூ. 11 என்ற விலையில், ஆகஸ்ட் 10 முதல் இந்த தேநீர் விற்கப்பட்டு வருகிறது.