tamilnadu

img

இ-சிகரெட்டிற்கு முழுமையாக தடை விதிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை பரிந்துரை

இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சி துறைக்கு உச்சமான தலைமையாக செயல்பட்டுவரும்  இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை இ-சிகரெட்டிற்கு முழுத்தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளது.

புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதனை நிறுத்துவதன் ஒருபடியாக மின்னணு சிகரெட் சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் e-cigarettes, heat-not-burn devices, vape, e-sheesha உள்ளிட்ட சாதனங்கள் அடங்கும். இதில் ஏற்படும் நிக்கோடின் புகையை பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று உலக புகையிலை ஒழிப்பு தினத்தன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை மத்திய அரசிற்கு பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் இ-சிகரெட்டுகள் புகைப்பழக்கம் இல்லாதவர்களையும் அப்பழக்கத்திற்குள் கொண்டுவர வாய்ப்பை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மின்னணு சிகரெட் வகைகளுக்கு தடைவிதிக்குமாறு அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.