tamilnadu

img

பொது மக்களின் கருத்துக் கேட்புக்குப் பின்னர்தான் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் கொண்டுவர வேண்டும்

ஏ.நவநீதகிருஷ்ணன் வேண்டுகோள்

புதுதில்லி, பிப்.5- காவிரி டெல்டா பகுதியில், பொது மக்களின் கருத்துக் கேட்புக்குப் பின்னர்தான் ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று மாநிலங்களவையில் அஇஅதிமுக உறுப்பினர் ஏ.நவநீதகிருஷ்ணன் வேண்டு கோள் விடுத்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் ஏ. நவநீதகிருஷ்ணன் பேசியதாவது: ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்கள் தொடர்பாக அனுமதி அளிப்ப தற்கு முன் மத்திய அரசு, மாநில அரசின் அதி காரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பின ர்களின் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது. அங்கே பொது மக்களின் கருத்துக் கேட்பு நடத்தி கருத்துக்களை அறிந்தபின்பும் உரிய  நடைமுறைகளை எடுத்தபின்பும்தான் மத்திய அரசு அனுமதி அளித்திட வேண்டும். இவ்வாறு ஏ.நவநீதிகிருஷ்ணன் கோரினார். (ந.நி.)