tamilnadu

மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு

புதுச்சேரி, ஜூன் 11- புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்து வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் இயக்கங்களை நடத்தி வருகிறது. இதுகுறித்து அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் காங்கிரஸ் கமிட்டி யின் பிரதேச தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, திமுக அமைப்பாளர்கள் சிவா,எம்.எல்.ஏ.,சிவக்குமார், சிபிஎம் பிர தேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், மூத்த தலைவர் தா.முருகன், சிபிஐ மாநிலச்  செயலாளர் சலீம், நிர்வாகிகள் விசுவநாதன், நாரா.கலை நாதன்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் தேவ. பொழிலன் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி புதன்கிழமை மாலை விவசாய அமைப்பு கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுவதைப் போல், புதுச்சேரியிலும் மனித சங்கிலி போராட்டம் அன்றைய  தினம் நடத்துவது என்று அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.   தள்ளிவைப்பு இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகி ராமன் மறைவை யொட்டி, புதுச்சேரி அரசு சார்பில் மூன்று  நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுதால் மனித சங்கிலி இயக்கம்  தற்போது தள்ளி வைக்கப்படுவதாகவும் தேதி பின்னர் அறி விக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.