districts

img

கிருஷ்ணகிரியில் 8 மையங்களில் மனித சங்கிலி

கிருஷ்ணகிரி, ஆக. 28- பீமா கொரேகான் எழுச்சியை பொருத்துக் கொள்ள முடியாத பாஜக  அரசு அவர்களை உஃபா  சட்டத்தில் கைது செய்துள் ளதை கண்டித்தும், உடனே அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அந்த வாய்ப்பூட்டு சட்டத்தை  உடனே திரும்பப் பெறக் கோரியும் செப்டம்பர் 15இல்  நாடு முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்  டம் முழுவதும் இந்தப் போராட்டத்தை வலிமையாக நடத்திடும் வகையில் அனைத்து அமைப்பினரும் கலந்து கொண்ட கூட்டம் ஓசூரில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத் தலை வர் ஆனந்தன் கலந்து கொண்டு போராட்டம் வெற்றிபெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

சிஐடியு மாவட்டச் செய லாளர் ஸ்ரீதர், திராவிடர் கழக  மாவட்டச் செயலாளர் வன வேந்தன், விசிக தொகுதிச் செயலாளர் ராமச்சந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன் னணி துணைத் தலைவர் இருதயராஜ், வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாதர் சங்க மாவட்டச்  செயலாளர் ஜேம்ஸ் ஆஞ் சலா மேரி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், ஜெய்பீம் பேரவை சங்கர், எஸ்சி மகளிரணி செயலாளர் சரோஜா, தமி ழக மக்கள் ஒற்றுமை மேடை  ஒருங்கிணைப்பாளர் சந்திர சேகர், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் பிஜி.மூர்த்தி உட்பட பலர் கலந்து  கொண்டனர். கூட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என்றும், அதையொட்டி துண்டுப்பிரசுரங்கள், போஸ்  டர்கள் மூலம் பிரச்சாரம் மேற்  கொள்ளவும் திட்டமிடப் பட்டது.