புதுதில்லி:
தலைநகர் தில்லி அருகே பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்த பகுதி குர்கான். இப்பகுதியில், மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக கூறி,மினிவேன் ஒன்றை சுமார் 8 கி.மீ.தூரத்திற்கு பசு குண்டர்கள் துரத்திச் சென்று மறித்துள்ளனர்.
பின்னர் வேனின் உள்ளேஇருந்த ஓட்டுநரை, எதுவும் விசாரிக்காமலேயே வெளியே இழுத்துப் போட்டு கொடூரமாகத்தாக்கியுள்ளனர். அத்துடன் விடாமல், அந்த ஓட்டுநரை மூட்டையாகக் கட்டி, குர்கானின் பாட்ஷாபூர் கிராமத்திற்கு தூக்கிச் சென்றுஅங்கு வைத்தும் தாக்கியுள்ளனர். தகவலறிந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபிறகே, தாக்குதலை அவர்கள் கைவிட்டுள்ளனர்.பசு குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்து, குற்றுயிரும் குறையுயிருமாக கிடந்த ஓட்டுநர் தற் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில் தாக்குதலுக்கான ஓட்டுநரின் பெயர் லுக்மேன்என்பதும், சதர் பஜார் மார்க்கெட் டிற்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாகஇறைச்சி சப்ளை செய்து வந்தவர் என்பதும் தெரிய வந்தது. தற்போதும் இறைச்சியை வழங் கவே லுக்மேன் குருகிராமிற்கு வந்திருக்கிறார்.
இதனிடையே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் இருந்தும் போலீசார் ஒருவரைக்கூட கைது செய்யவில்லை.பாட்ஷாப்பூர் காவல்நிலையத்தில் எப்.ஐ.ஆர் மட்டும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.