tamilnadu

தமிழ்நாட்டிற்கு புதிய விமானப் போக்குவரத்து மார்க்கங்களை அரசு அறிவித்திருக்கிறதா?

புதுதில்லி, ஜூலை 13- தமிழ்நாட்டிற்கு புதிய விமானப் போக்குவரத்து மார்க்கங்களை மத்திய அரசு அறிவித்திருக்கிறதா? ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்க ளவை உறுப்பினர்கள் பி.ஆர். நட ராஜன் - சு. வெங்கடேசன் ஆகியோர் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொ டர் நடைபெற்று வருகிறது. வியாழன் அன்று கேள்வி நேரத்தின்போது பி.ஆர். நடராஜன் – சு. வெங்கடேசன் ஆகியோர் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு புதிய விமானப் போக்குவரத்து மார்க்கங்க ளை அறிவித்திருக்கிறதா என்றும் ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார்கள். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த மத்திய சிவில் விமானப்போக்குவரத்து இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி, விமானப் போக்கு வரத்து நிறுவனங்கள் அளித்துள்ள தகவல்களின்படி, கடந்த ஐந்தாண்டுக ளில் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத் தப்பட்ட மார்க்கங்கள் பின்வருமாறு:
இண்டிகோ:  புவனேஷ்வர் – சென்னை, பேங்காக் – சென்னை, பெங்க ளூரு – கோயம்புத்தூர், பெங்களூரு – மதுரை, கள்ளிக்கோட்டை – சென்னை, கோயம்புத்தூர் – ஹைதராபாத், கொழும்பு – சென்னை, கண்ணூர் – சென்னை, கொச்சி – திருச்சி, தோஹா – சென்னை, குவகாத்தி – சென்னை, கோவா – சென்னை, ஹூப்ளி – சென்னை, ஹைதராபாத் – மதுரை, இந்தூர் – சென்னை,மங்களூரு – சென்னை, மதுரை – சென்னை, அந்த மான் போர்ட்பிளேர் – சென்னை, ஜெய்ப்பூர் – சென்னை, சென்னை – ரெய்ப்பூர், சென்னை – சூரத், சென்னை – தூத்துக்குடி, சென்னை – திருச்சி, சென்னை – உதய்பூர், சென்னை – விஜயவாடா, சிங்கப்பூர் – திருச்சி ஆகிய நகரங்களுக்கு இடையிலும், இதேபோன்று ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, புதுச்சேரி ஆகிய நிலையங்களி லிருந்து நாட்டின் பல்வேறு நகரங்க ளுக்கும், ஏர் ஏசியா நிறுவனம் சென்னை யிலிருந்து, பெங்களூரு, புவனேஸ்வர், கொல்கத்தா, ஹைதராபாத் நகரங்க ளுக்கும், கோ ஏர் நிறுவனம் சென்னையி லிருந்து அகமதாபாத், கொல்கத்தா, கண்ணூர், கொச்சி நகரங்களுக்கும், விஸ்தாரா நிறுவனம் சென்னை – தில்லி, சென்னை-மும்பை இடையே யும், ட்ரூஜெட் நிறுவனம் சென்னையி லிருந்து கடப்பா, மைசூரு, சேலம், ஹைதராபாத், ராஜமுந்திரி, விஜயவாடா, சிங்கப்பூர் நகரங்களுக்கும், ஏர் இந்தியா, மதுரை – சிங்கப்பூர், கோவை – சிங்கப்பூர், கொச்சி – சிங்கப்பூர், தில்லி – மதுரை, தில்லி-கோவைக்கும், சென்னை-வாரணாசிக்கும் இடையே விமானங்களை இயக்கி வருகின்றன.