திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., இ.கருணாநிதி எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர். அவர்களிடம் பேசிய சங்கரய்யா, தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்த முன்னணிதான் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்தது. பிற்போக்கு சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கு தமிழகத்தில் அமைந்த அணிதான் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கிறது. இது மேலும் தொடர வேண்டும். வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தல் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்திய அரசியலுக்கே முக்கியமானது என்றார்.